Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#IPL2025 | லக்னோ அணியின் ஆலோசகராகும் ஜாகீர் கான்? வெளியான தகவல்!

10:00 AM Aug 20, 2024 IST | Web Editor
Advertisement

லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற ஜாகீர் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.  அந்த வகையில், குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார்.

அணியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இதனிடையே லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர் கடந்த வருடமே அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மோர்கலும் விலகியுள்ளார்.

இந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரரான ஜாகீர் கானிடம் அந்த அணியின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அதனை ஏற்கும் பட்சத்தில் நிச்சயம் அது லக்னோ அணிக்கு வலுவானதாக அமையும் என்று கூறப்படுகிறது.

Tags :
#SportsCricketIPLIPL2025Lucknow Super GiantsZaheer Khan
Advertisement
Next Article