Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2025 : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

06:54 AM May 21, 2025 IST | Web Editor
Advertisement

நடப்பு ஐபிஎல் போட்டியின் 62-ஆவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

Advertisement

கான்வே பத்து ரன்களில் ஆட்டமிழக்க, அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய உர்வில் பட்டேல் 0 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து அஸ்வின், ஆயுஷ் மாத்ரே ஜடேஜா விக்கெட்டை பறிகொடுத்தனர். விக்கெட் ஒருபக்கம் சரிந்தாலும், ரன்ரேட்டையும் ஈடுகொடுத்து வந்தது சென்னை. இதனையடுத்து களமிறங்கிய ப்ரெவிஸ் அதிரடி காமித்து 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

துபே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களும், கேப்டன் தோனி 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு வெளியேற, ஓவர்கள் முடிவில் அன்ஷுல் காம்போஜ் 5, நூர் அகமது 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங், ஆகாஷ் மத்வல் ஆகியோர் தலா 3, துஷார் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்ந்து 188 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களிலேயே போட்டியை முடித்தது. ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 36, வைபவ் சூர்யவன்ஷி 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 57, கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

ரியன் பராக் 3 ரன்களுக்கு வீழ, துருவ் ஜுரெல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 31, ஷிம்ரன் ஹெட்மயர் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை தரப்பில் அஸ்வின் 2, காம்போஜ், நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Tags :
chennai super kingsIndian Premier LeagueRajasthan RoyalsRRvsCSK
Advertisement
Next Article