Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2025 - குஜராத் அணியை வீழ்த்தியது பஞ்சாப்!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி...
07:00 AM Mar 26, 2025 IST | Web Editor
Advertisement

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5வது போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்ததது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களும், பிரியன்ஸ் ஆர்யா 47 ரன்களும் விளாசினார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும், ரஷித் கான், காகிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பின்னர் 244 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்களும், ஜோஸ் பட்லர் 54 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில்  9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றிப் பெற்றது.

Tags :
GT vs PBKSGujarat TitansIPL 2025Punjab Kings
Advertisement
Next Article