Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2025 - ஹைதராபாத் அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
09:36 PM Apr 03, 2025 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் 2025 தொடரின் 15-ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கமின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

அதன்படி கொல்கத்தா அணியின் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் ஒரு ரன்னிலும், சுனில் நரைன் ஏழு ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.  3-ஆவது ரகானே உடன் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 11 ஓவரில் 97 ரன்னாக இருக்கும்போது ரகானே 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை உயர்த்தி 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளும் இதுவரை விளையாடி உள்ள 3 போட்டிகளில் தலா இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், 2வது வெற்றியை யார் பதிவு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags :
IPL 2025KKRvsSRHKolkata Knight RidersSunrisers Hyderabad
Advertisement
Next Article