Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL 2025 | ரசிகர்களுக்கு குட் நீயூஸ்... சிஸ்கே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
06:25 PM Mar 15, 2025 IST | Web Editor
Advertisement

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில்  கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

Advertisement

இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்பவதற்காக, கூடுதலாக 90 நிமிடங்களுக்கு மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல்2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

இந்த முயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் CSK போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ ரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன்,பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும்.

கூடுதலாக, ஸ்பான்சர்செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டிமுடிந்த பிறகு மெட்ரோ ரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும்.

ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ ரயில் புறப்படும் நேரம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennaichennai metroIPLIPL 2025Metronews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article