Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL 2025 | மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
07:22 PM May 21, 2025 IST | Web Editor
மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Advertisement

10 அணிகள் இடையிலான 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 17ம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் மும்பையில் நடைபெறும் 63வது ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன.

Advertisement

இதையும் படியுங்கள் : ‘சுகர் பேபி என் சுகர் பேபி..’ – வெளியானது ‘தக் லைஃப்’ படத்தின் செகண்ட் சிங்கிள்!

இதில் மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.

டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு போட்டிகளிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். இதற்கிடையே, இன்றைய போட்டியில் காயம் காரணமாக அக்சர் படேல் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ஃபாஃப் டூப்ளசி டெல்லி அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Advertisement
Next Article