Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2025 : சென்னை-பெங்களூர் அணிகள் இன்று மோதல் - கோப்பையை வெல்ல போவது யார்?

ஐபிஎல் 8வது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன.
07:30 AM Mar 28, 2025 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் 8வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை - பெங்களூர் அணிகள் மோதுகின்றது. இந்த ஆட்டம், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 07:30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement

ஐபிஎல் போட்டியில் இதுவரை இந்த இரண்டு அணிகளும் 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21 முறை சென்னையும், 11 முறை பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே இன்று நடைபெறும் போட்டியில் கோப்பையை வெல்ல போவது யார்? என்று ரசிகர்கள் உற்ச்சாகத்துடன் காத்திருக்கின்றன.

முன்னதாக கடந்த 23ம் தேதி சென்னை -மும்பை அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டை வைத்து ஸ்டேடியத்திற்கு செல்லவும், போட்டி முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கும் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பேருந்துகளை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
BangaloreChennaiChepakkamCricketIPL 2025stadiumTeams
Advertisement
Next Article