Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2024 : பஞ்சாபை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது ஹைதரபாத்!

09:01 PM May 19, 2024 IST | Web Editor
Advertisement

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement

மார்ச் மாதம் 22ம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன், அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், மே 22-ம் தேதி முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன.

இதையடுத்து, இன்றைய போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் அணிகள் பெறும் இடத்தை பொறுத்து ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் 69-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன் சிங் – அதர்வா டைடே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். அதர்வா 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் பிரப்சிம்ரன் மற்றும் ரூசோ இருவரும் கைகோர்த்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரப்சிம்ரன் சிங் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரூசோ 49 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி 32 ரன்கள் குவித்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 215 ரன்கள் வெற்றி இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது.  ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர். முதல் பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். அதன்பின் அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி இணைந்து விளையாடினர். ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையும் படியுங்கள் : ஜூலை 12-ல் வெளியாகிறது 'இந்தியன் 2'... மே 22-ல் முதல் பாடல் வெளியீடு!

இதனையடுத்து, நிதிஷ் ரெட்டி மற்றும் கிளாசன் இணைந்து விளையாடினர். நிதிஷ் ரெட்டி 25 பந்துகளில் 37 ரன்களும், கிளாசன் 26 பந்துகளில் 42 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களில் பஞ்சாப் அணி நிர்ணயித்த இலக்கை அடைந்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 17 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Tags :
IPLIPL2024pkbsPKBSvsSRHSRHSRHvsPKBS
Advertisement
Next Article