Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL 2024 : 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!

06:58 AM Mar 29, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் மொத்தமாக 1085 வேட்புமனுக்கள் ஏற்பு! 664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

இதையடுத்து, டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே
அடித்தது. இதன் மூலம் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் திரில் வெற்றியை பதிவு செய்தது.டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 49 ரன்களும், ஸ்டப்ஸ் 44 ரன்களும் அடித்தனர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
DCvsRRDelhicapitalsrajasthanroyalsRiyanParaggRRvsDCSanjuSamson
Advertisement
Next Article