IPL 2024 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்!
ஐபிஎல் 2024 தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள் : நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!… அதிர்ச்சியில் திரையுலகினர்…
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில்,16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 3வது வெற்றியாகும்.
இதையடுத்து, லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இதையடுத்து தனது 2 வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. இரு அணிகளும் அதிரடியாக போட்டியிடும் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.