Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2024 : டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

07:54 PM Apr 07, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் 2024 தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஐபிஎல் 2024ன் 20 வது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. வான்கடே மைதானத்தில் இதுவரை நடந்த 112 இந்தியன் டி20 லீக் போட்டிகளில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 62 முறை வெற்றி பெற்றுள்ளது, இந்த மைதானத்தில் சேஸிங்  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இரு அணிகளும் தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசியில் பின்தங்கியுள்ள நிலையில், மும்பை 10வது இடத்தையும், டெல்லி 9வது இடத்தையும் பிடித்துள்ளன. இதனால் இந்த போட்டி முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி பந்துகளை பவுண்ட்ரி மற்றும் சிக்சர்களை பறக்க விட்டார். தனது அதிரடியான ஆட்டத்தால் அவர் அரைசதம் கடப்பார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அக்சர் பட்டேலின் பந்தில் 49ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய இஷான் கிசான் சூர்யா குமார் யாதவுடன் கைகோர்க்க சூர்ய குமார் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக  விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிட் மற்றும் ரோமாரியோ ஆகிய இருவரும் தங்களது பங்குக்கு ரன்களை குவித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 234 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 235ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிதானமாக ரன்களை குவிக்க ஆரம்பத்தித்தது. தொடக்க ஆட்டக்காரரான பிரித்விஷா அதிரடியாக விளையாடி 66 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் பந்துவீச்சில் போல்டானார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்படி டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

Tags :
DC vs MIHardik PandyaIPLIPL 2024mi vs dcRohit sharma
Advertisement
Next Article