Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு!

07:16 PM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் 2024ன் இன்றைய லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தநிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இவற்றில் டாஸ் வென்ற  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்து வீசுகிறது.

Tags :
dcDC vs LSGIPLIPL 2024kl rahulLSGLSG vs DCrishab pant
Advertisement
Next Article