IPL 2024 : லக்னோ வெற்றி பெற 236 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 236 ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது.
ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இன்றைய ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மாலை 7.30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்தது.
இதையும் படியுங்கள் : மதுரையில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு! – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றம் சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 39 ரன்களில் 81 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 26 பந்துகளில் 32 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 5வது வீரராக களமிறங்கினார். 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக ரமன்தீப் சிங் மற்றும் வெங்கடேச ஐயர் களத்தில் இருந்தனர்.
ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 236 ரன்களை இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.