IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது 3 வது வெற்றியை பதிவு செய்தது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இதையும் படியுங்கள் : சமூகநீதி பேசும் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் கை கோர்த்த மர்மம் என்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழந்து 182 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், 183ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 3வது வெற்றியாகும்.