Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL 2024 : பெங்களூர் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல்!

07:43 AM Mar 29, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் 2024 தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : IPL 2024 : 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.அதிகபட்சமாக இந்த தொடரில் ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, இன்று இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாட உள்ளனர்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முதல் லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் நடைபெற்றது. அதில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதையடுத்து, பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை  4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை அணியை வீழ்த்தியது. இதையடுத்து 2-வது வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் அதிரடியாக போட்டியிடும் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
IPL 2024kkrKolkata Knight RidersRCBRoyalChallengersBangalore
Advertisement
Next Article