Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL 2024 : 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!

06:58 AM Apr 05, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் லீக் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 17வது லீக் போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி  அகமதாபாதில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : “ஒரு கட்டத்தில் தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன் , ஆனால்..” – நடிகை மிருணாள் தாக்குர் அதிர்ச்சி தகவல்!

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 48 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். சாய் சுதர்சன் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் விளாசியது.  அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.

Tags :
GTGujarat TitansIPLIPL2024pkbspunbaj kings
Advertisement
Next Article