IPL 2024 : மும்பை அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் – 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதையும் படியுங்கள் : IPL 2024 : லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் – 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாம் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா ஆகியோர் களம் இறங்கினர். இதையடுத்து, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். கிஷன் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் 43 ரன்களும், நமன் 20 ரன்களும், ப்ரவிஸ் 46 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.