ஐபிஎல் 2024 : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ!
ஐபிஎல் 2024ன் இன்றைய லீக் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு லக்னோ அணி 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது.
வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
முதலில் குயிண்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன்களை குவிக்க குயிண்டன் டி காக் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற ஆயுஷ் படோனி மட்டும் அரை சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் குல்தீப் யாதவ் 34 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் டெல்லி அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி.