Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2024 CSK vs DC - டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு!

07:19 PM Mar 31, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வார இறுதியான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, இரண்டாவது போட்டியில்  ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், டெல்லி அணியோ விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற சென்னை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க டெல்லி அணியும் முனைப்பு காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற அணியில் உள்ள பல பிரச்னைகளை டெல்லி அணி நிவர்த்தி செய்ய வேண்டியது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 19 முறையும், டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.  டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 110 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 198 ரன்களையும், குறைந்தபட்சமாக 83 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸை வென்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Tags :
chennai super kingscsk vs dcDC vs CSKdelhi capitalsIPLIPL 2024
Advertisement
Next Article