Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆப்பிள் மொபைலுக்கான iOS 18 #SoftwareUpdate - இன்று வெளியாகிறது!

03:42 PM Sep 16, 2024 IST | Web Editor
Advertisement

ஆப்பிள் நிறுவனத்தின் iOS 18 இன்று இரவு 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இட்ஸ் க்ளோடைம் நிகழ்வு சில தினங்களுக்கு கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகியவற்றை வெளியிட்டது.

ஆப்பிளின் புதிய மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐபோன் 15 ஃபோன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஃப்ளாஷ் உடன் இந்த போன் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பு, வெள்ளை, பிங்க், கிரீன் மற்றும் நீல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 16 வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 16, 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடனும், ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடனும், ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

பயனர்கள் விரைவாகவும், போன் ஹேங் ஆகாமல் பயன்படுத்துவதற்காக புதிய A18 chip பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக இந்த போனில் ஆப்பிள் ஏஐ இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டோக்களை நீங்களாகவே விரும்பியவாறு எடிட் செய்து கொள்வதோடு, அதனை ஸ்டிக்கராகவும் மாற்றிக் கொள்ளலாம். இதேபோல புதிய அறிமுகமாக வலது புறத்தில் புதிய பட்டனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பட்டனை ப்ரஸ் செய்து முன்னும் பின்னும் நகர்த்தினால் ஜூம் இன் மற்றும் ஜும் அவுட் ஆகும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் iOS 18 இன்று இரவு 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாஃப்ட்வேர் அப்டேட் 25 ஐபோன் மாடல்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
appleapple new updateios
Advertisement
Next Article