Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு - கார்த்தி சிதம்பரத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு..!

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பான வழக்கில் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்தி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
03:44 PM Oct 15, 2025 IST | Web Editor
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பான வழக்கில் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்தி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement

கடந்த 2007-ம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமமானது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெறுவதற்காக வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது.

Advertisement

இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எம்.பி. ஆகியோர் மீது  சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல நீதிமன்றம் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.  அதன்படி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் போது ஒவ்வொரு முறையும் விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று அந்த நிபந்தனையில் கூறப்படிருந்தது.

இந்த நிபந்தனைகளுக்கு தளர்வு கேட்டு கார்த்திக் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்

இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வெளிநாடு செல்லும் கார்த்தி சிதம்பரம் அங்கு என்ன செய்யப்போகிறார் என்பதை மட்டும்  இரண்டு வாரங்களுக்கு முன்பாக விசாரணை நீதிமன்றத்தில் வழங்கினால் போதும் என உத்தரவிட்டுள்ளது.

Tags :
DelhiCourtForiegnINXmediacasekarthichidambaramlatestNews
Advertisement
Next Article