Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம்! அந்த அசத்தல் அப்டேட் என்ன தெரியுமா?

09:52 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement

வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Advertisement

சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல அந்நிறுவனமும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. மேலும் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் மெட்டா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஒரு செய்தியை டெலீட் (delete) செய்தால் அதை திரும்ப பெறும் (undo) வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் முன்னதாக அறிமுகப்படுத்தியது.  அதேபோல் நாம் தவறுதலாக அனுப்பிய செய்தியை நீக்க, டெலிட் ஃபார் எவ்ரி ஒன் (delete for everyone) என்பதற்கு பதிலாக டெலிட் ஃபார் மீ (delete for me) என்பதை கொடுத்துவிட்டால்,  அந்த செய்தி நமது வாட்ஸ் ஆப் சேட்டிலிருந்து நீங்கிவிடுமே தவிர செய்தியை பெற்றவர்கள் அதனை பார்க்க முடியும்.

இந்தப் பிரச்னையை போக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஒரு செய்தியை டெலிட் ஃபார் மீ (delete for me) என்று கொடுத்துவிட்ட அடுத்த 5 வினாடி வரை அன்டூ (undo) பாப் அப்பில் தெரியும்.  5 வினாடிக்குள் அன்டூ (undo) செய்துவிட்டால் அந்தச் செய்தியை நாம் சாட் பாக்ஸில் திரும்பப் பெறலாம். பிறகு அதனை டெலீட்ஃபார் எவ்ரி ஒன் வசதி மூலம் யாரும் பார்க்காத வகையில் நீக்கி விடலாம்.

Tags :
new facilitynew featurewhatsapp
Advertisement
Next Article