எலான் மஸ்க்கின் 'க்ராக்' செய்யறிவு தொழில்நுட்பம் அறிமுகம்!
எலான் மஸ்க் தனது 'க்ராக்' (GROK) செய்யறிவு தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
கூகுள் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்டு இன்னும் ஆச்சரியம் அடங்கிடாத நிலையில், எலான் மஸ்க் தனது 'க்ராக்' (GROK) செய்யறிவு தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
எலான் மஸ்க்கின் செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான 'எக்ஸ் ஏஐ' (xAI) இந்த க்ராக்கை உருவாக்கியுள்ளது. தற்போது 'க்ராக்' தொழில்நுட்பம் எக்ஸ் தளத்தின் ப்ரீமியம் பயனாளர்களுக்கு மட்டும் பயன்பாட்டிற்கு உள்ளது. மேலும், இது ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் செய்யறிவு தொழில்நுட்பம் எக்ஸ் தளத்தையும் தனது தகவல் பெறும் இடமாகக் கொண்டு செயல்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எனவே, மற்ற அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களை விட புதிய தகவல்களைத் தருவதாகக் கூறுகிறார். க்ராக் தொழில்நுட்பம் அதிபுத்திசாலித்தனமாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் அவரது முந்தைய பதிவு ஒன்றில் எலான் மஸ்க்கின் கடைசி நேர்காணலில், நெறியாளர் என்ன உடை அணிந்திருந்தார்? என்ற கேள்விக்கு சரியான விடையைச் சொன்னதுடன் அந்த நெறியாளருக்கு அந்த உடை எப்படி இருந்தது என்ற தனது கருத்தையும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, க்ராக் கிண்டலாகப் பேசும் குணம் கொண்டது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்ற AIகளைப் போல் இல்லாமல் கேட்கும் தகவல்களை 'க்ராக்' கிண்டலான வகையில் தருவதாகப் பயனாளர்களும் தெரிவிக்கின்றனர்.