பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் - மன்னிப்பு கோரியது ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம்!
“பெண் காவலர்களின் மனதை புண்படுத்தும் படியான வீடியோவை ஒளிப்பரப்பியதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனமான ரெட் பிக்ஸ் சார்பில் ஒளிப்பரப்பிற்காக மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் ஜேன் பெலிக்ஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் பிரைவேட் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.