Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்வதேச மகளிர் தினம் - முதல் முறையாக பெண்கள் குழு இயக்கிய வந்தே பாரத் ரயில் !

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வந்தே பாரத் ரயிலை பெண்கள் மட்டுமே இயக்கி சாதனை படைத்துள்ளனர்.
08:44 AM Mar 09, 2025 IST | Web Editor
Advertisement

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (மார்ச்.8 ) ஜார்க்கண்டில் ராஞ்சி-டோரி பயணிகள் ரயிலை அனைத்து பெண் ஊழியர்களும் இயக்கியுள்ளனர். இந்த குழுவில் லோகோ-பைலட், உதவி லோகோ-பைலட், ரயில் மேலாளர், மூன்று டிக்கெட் சரிபார்ப்பவர்கள் மற்றும் நான்கு ஆர்.பி.எப். பணியாளர்கள் இருந்தனர்.

Advertisement

தென்கிழக்கு ரயில்வேயின் ராஞ்சி பிரிவு மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முயற்சியை எடுத்துள்ளது. இது குறித்து ரயில் மேலாளர் அனுபமா லக்ரா கூறியதாவது,

"இந்திய ரயில்வேயின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பெண்கள் எந்த வேலையும் செய்ய வல்லவர்கள், அவர்களுக்கு வாய்ப்புகள் மட்டுமே தேவை. விமான நிறுவனங்கள், விளையாட்டு அல்லது ரயில்வே என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் உயர்ந்து வருகின்றனர்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த ரயில் காலை 9 மணிக்கு ராஞ்சி நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் டோரியை அடைந்தது. மொத்தம் 14 நிறுத்தங்கள் மட்டுமே இருந்த இந்த ரயிலினை அனைத்து பெண்களும் வெற்றிகரமாக இயக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Tags :
operatedpilotTrainVande BharatWomensWomensDay
Advertisement
Next Article