Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி | சாம்பியன் பட்டம் வென்ற மும்பை எமிரேட்ஸ்!

09:11 AM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை எமிரேட்ஸ் வென்றது. 

Advertisement

துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன. அதில், MI எமிரேட்ஸ், கல்ப் ஜெய்ண்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இதன் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும், துபாய் கேபிடல்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற துபாய் கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய எமிரேட்ஸின் தொடக்க வீரர்களான முகமது வசீம் 43, குஷல் பெரேரா 38 ரன்களும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே பிளட்சர் 53 ரன்களும் , நிகோலஸ் பூரன் 57 ரன்களும் எடுத்து  20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய துபாய் கேபிடல்ஸின் தொடக்க வீரர் டி ப்ளாய் டக் அவுட் ஆனதைத் தொடர்ந்து,  டாம் பன்டன் 35 ரன்களும், சிக்கந்தர் ராசா 10 ரன்களும், ரௌமேன் பௌல் 8 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் துபாய் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்தது.நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம் ஐ எமிரேட்ஸ் அணி, துபாய் கேபிடல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Tags :
#SportsCricketDPWorldILT20ILT20MIE vs DCMumbai Indians
Advertisement
Next Article