Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்வதேச செஸ் போட்டி - குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றார் !

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார்.
11:35 AM Feb 03, 2025 IST | Web Editor
Advertisement

நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் 87வது டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.

Advertisement

இதனையடுத்து நடைபெற்ற 13-வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். குகேஷ் சக நாட்டவரான அர்ஜுன் எரிகைசிக்கு எதிராகவும், பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிராகவும் தோல்வியடைந்தனர். இதனால் மீண்டும் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சம புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான டை பிரேக்கர் சுற்றில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா அசத்தலாக வெற்றி பெற்றார். இந்த வெற்றி உலக செஸ் அரங்கில் பிரக்ஞானந்தாவின் ஆற்றல் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

Tags :
ChampionChesschess tournamentdefeatsinternationalKukeshpraggnanandhaa
Advertisement
Next Article