உணவு பிரியர்களின் ஸ்பெஷல்!
அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றான பர்கரை உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 28ம் தேதி சர்வதேச பர்கர் தினம் கொண்டாடப்படுகிறது. பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான பர்கரை கொண்டாடும் ஒரு இனிமையான நாள் நேற்று.
கிரில்லை தீ மூட்டி, அதில் பன்களை அடுக்கி உணவு பிரியர்களுக்கு மகிழ்ந்து சாப்பிடுவார்கள் .இந்த சுவைமிக்க உணவை இந்த நாளில் மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் வாங்கி சாப்பிடுவார்கள். நீண்ட காலத்திற்கு முன்பே ஜெர்மனியில் பர்கர் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவிலேயே பர்கர் பிரபலமடைந்தது.
இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் இறைச்சியை வைத்து சாப்பிடும் யோசனையிலிருந்து பர்கர் உருவானதாக கூறப்படுகிறது. அப்போது, அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் உணவாக பர்கர் மாறிவிட்டது. நவீன கால பர்கரின் பிறப்பிடமான அமெரிக்கா, பலவிதமான பர்கர்களை தயாரிப்பதில் பிரபலமானதாகும்.
இதையும் படியுங்கள் “வெங்காய ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்” – வியாபாரிகள் கோரிக்கை!
இந்தியாவிலும் பர்கரை அதிகளவில் விரும்பி உணவும் உணவு பிரியர்கள் அதிகரித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 60 லட்சத்துக்கும் அதிகமான பர்கர்கள் பெங்களூருவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பர்கர் ஆர்டர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.