Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சி.வி.சண்முகத்திற்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

06:45 PM Mar 15, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசு அதிமுக எம்.பி., சி.வி.சண்முகத்துக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசையும்,  முதலமைசரையும் அவதூறாக பேசியதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மீது தமிழ்நாடு அரசு சார்பில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலையில் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீது இன்று (மார்ச் 15) விசாரணை நடைபெற்றது. அப்போது, சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags :
CV ShanmugamMadras High CourtNews7Tamilnews7TamilUpdatesTamilNaduTN GovtVilupuram
Advertisement
Next Article