இடைக்கால பட்ஜெட் 2024 | ஒரு பார்வை...
இடைக்கால பட்ஜெட் குறித்த முக்கிய அறிவிப்புகளை தற்போது பார்க்கலாம்....
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இடைக்கால பட்ஜெட் 2024 | ஒரு பார்வை:
1. நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியாண்டில் உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடு ரூ.11.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
2) உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக லட்சத்தீவு உள்ளிட்ட நமது தீவுகளில் துறைமுக இணைப்பு, சுற்றுலா, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டங்கள் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
3) ஜூலை மாதம் முழு பட்ஜெட்டில், வளர்ந்த இந்தியாவின் இலக்கை பற்றிய விரிவான வரைபடத்தை எங்கள் அரசு முன்வைக்கும் என்று கூறினார்.
4) பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
5) மூன்று பெரிய பொருளாதார ரயில்வே வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.
- எரிசக்தி, கனிம மற்றும் சிமெண்ட் தொழிற்துறை,
- துறைமுக இணைப்பு வழித்தடம்,
- அதிக போக்குவரத்து அடர்த்தியை நெரிபடுத்துவது. PM கதிசக்தியின் கீழ் மல்டிமாடல் இணைப்பை செயல்படுத்த திட்டங்கள் வகுப்பது.
6) அனைத்து ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வருவார்கள்
7) விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக, அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் அரசு மற்றும் தனியார் முதலீட்டை அரசு மேலும் ஊக்குவிக்கும்.
8) கோவிட் இருந்தபோதிலும், பிரதமர் ஆவாஸ் யோஜனா (கிராமப்புறம்) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டும் பணியை முடித்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.
9) மக்களை மையப்படுத்திய மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
10) கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களுக்கு 70% வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
11) இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
12) கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஆழமான நேர்மறையான மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்திய மக்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கப்படுகிறது. 2014-ல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அரசு பதவியேற்றபோது, நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது. அந்தச் சவால்களை அரசாங்கம் சரியான முறையில் சமாளித்ததுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.