Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வடகிழக்கு பருவமழை தீவிரம்... தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு...

10:26 AM Nov 14, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயா்ந்துள்ளதாக நீர் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

நீர் வளத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் களஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆய்வு கிணறு அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் அளவு ஆய்வு செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபரில் நடத்திய ஆய்வின்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அளவு சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக கன்னியாகுமாரியில் 2.44 மீட்டரும், விழுப்புரத்தில் 1.35 மீட்டரும், திருவண்ணாமலையில் 1.81 மீ அளவுக்கு நிலத்தடி நீர் அளவு உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை நீடிக்கும் நிலையில், தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Chennai rainsChennai RMCGround WaterMonsoonNews7Tamilnews7TamilUpdatesrain alertTNRainsWeather Update
Advertisement
Next Article