Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்ஸ்டா - பேஸ்புக் குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்கிறது மெட்டா!

05:22 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

பிரபல சமூகவலைதள நிறுவனமான மெட்டா, கடந்த 2020-ம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தியது.
இன்ஸ்டாகிராமிலிருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், பேஸ்புக்கின் மெசஞ்சர் (Messenger) செயலி மூலம் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதையும் படியுங்கள்: ஏழைகள் ஏழைகளாகவே இருப்பது நாட்டின் சாபக்கேடு – கனிமொழி என்.வி.என்.சோமு!

இந்நிலையில்,  டிசம்பர் மாதத்தோடு அந்த சேவையை நிறுத்துவதாக மெட்டா அறிவித்துள்ளது.  இனி,  இந்த வசதி மூலம் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் செய்யமுடியாது எனினும்,  ஏற்கனவே இருக்கும் உரையாடல்களை படிக்க மட்டும் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.  மெட்டா, தனது மெசஞ்சர் தளத்தை என்ட்-டூ-என்ட் (end-to-end encryption) முறைக்கு மாற்றவிருப்பதால் இந்த சேவையை நிறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags :
FacebookinstagramMessengerMetanews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article