“வானிலை, பேரிடர் முன்னறிவிப்பு தகவல்கள் வழங்கும் இன்சாட் - 3DS செயற்கைகோள் பி.17-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்!” - இஸ்ரோ அறிவிப்பு
புயலின் நகர்வு, மழைக்கால மேகம், இடி மின்னல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள், பூமி மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விபரங்களை முன்கூட்டியே வழங்கும் இன்சாட் - 3DS செயற்கைகோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவிப்பு.
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சார்பில் நாளை மறுநாள் 17ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு வானிலையை ஆராய்ச்சி செய்வதற்காக INSAT - 3DS என்கிற செயற்கைக்கோள் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட இருக்கிறது GSLV - F 14 ராக்கெட்.
இந்த செயற்கைக்கோளின் பணி இந்தியாவை சுற்றி இருக்கக்கூடிய கடற் பரப்பில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் குறித்து கண்காணிப்பது வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய அழுத்த வேறுபாடுகள் குறித்து தரவுகளை வானிலை ஆய்வு மையத்திற்கு தருவது மற்றும் கடலில் தொலைந்து போகும் மீனவர்களை தேடும் பணியில் உதவிகரமாக இருப்பது மற்றும் பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிவது ஆகிய பணிக்காக அனுப்பப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் எதிர்பாராத விதமான அதிகன மழை பெய்து பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்ட போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சரியான தரவுகள் அரசுக்கு வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்த நிலையில் தற்போது வானிலையை மேலும் துல்லியமாக கணிப்பதற்காக இந்த INSAT- 3DS செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.