Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்!

09:20 PM Oct 17, 2024 IST | Web Editor
Advertisement

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் உள்பட ஏராளமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழப்புகள் ஆயிர கணக்கில் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தை கடந்து நடைபெற்று வரும் இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

இதனிடையே, இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) ஈரானில் ஜூலை 31-ந் தேதி கொல்லப்பட்டார். ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்.

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவரை ஹமாஸ் அறிவித்தது. அதன்படி, ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டார். யாஹ்யா சின்வார் ஹமாஸின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் எனவும் உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இருப்பினும், இஸ்ரேல் ராணுவம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
GazaHamasIsrealnews7 tamilPalestineRocket StrikeYahya Sinwar
Advertisement
Next Article