Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#INDvsSA | 2வது டி20 போட்டி... இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்!

12:01 PM Nov 10, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் டர்பனில் நேற்று முன்தினம் (நவ.8) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சாம்சன் 107 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனையடுத்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கிளாசன் 25 ரன்னும், கோட்சி 23 ரன்னும், ரிக்கல்டன் 21 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த நிலையில். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்த்து வருகின்றன.

அணிகளின் விரம் :-

இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், வருண் சக்ரவர்த்தி.

தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பேட்ரிக் குருகர், மார்கோ யான்சென், அன்டில் சிம்லேன், ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், நபயோம்ஜி பீட்டர் அல்லது ஒட்னில் பார்ட்மேன்.

Advertisement
Next Article