Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#INDvsNZ 2-வது டெஸ்ட் | இந்தியாவுக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து அணி!

12:12 PM Oct 26, 2024 IST | Web Editor
Advertisement

புனேயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் (அக்-24ம் தேதி) தொடங்கியது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் இடம் பிடித்தார்.

இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர், 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 17 ரன்களிலும், அவரை தொடர்ந்து வில் யங் 23 ரன்களிலும், ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், களமிறங்கிய டேரில் மிட்செல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கேப்டன் லதாம் 86 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்தது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து, இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதில் டாம் பிளண்டெல் 41 ரன்னிலும், சாண்ட்னெர் 4 ரன்னிலும், அஜாஸ் படேல் 1 ரன்னிலும், சவுதி ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 255 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாம் லாதம் 86 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்து முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் சேர்த்து இந்தியாவுக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கில் 22, ஜெய்ஸ்வால் 46 ரன்களுடனும் விளையாடி வருகிறார். இந்திய அணி 12 ஓவர் முடிவில் 81/1 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement
Next Article