Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#IndVsBan | இந்தியா - வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

08:10 AM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று தொடங்குகிறது.

Advertisement

வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட், சுப்மன் கில், அஸ்வின் ஆகியோர் சதமும், ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா அரைசதமும் அடித்தனர். பந்து வீச்சில் அஸ்வினுடன், ஜடேஜா, பும்ரா ஆகியோர் மிரட்டினர்.

இரண்டாவது டெஸ்ட் தொடருக்கான இரு அணிகள்:

இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் பட்டேல்.

வங்காளதேசம்: ஷத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மக்மூத், தஸ்கின் அகமது, நஹித் ராணா அல்லது தைஜூல் இஸ்லாம்.

Tags :
BangladeshCricketIndiaINDVsBANnews7 tamilSportsSports Updatetest match
Advertisement
Next Article