Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Emergency-யை திரைத்துறை ஆதரிக்கவில்லை - கங்கனா ரனாவத் வேதனை!

01:29 PM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

‘எமர்ஜென்சி’ திரைப்படம் தொடர்பான தணிக்கை பிரச்னைகளில் அரசோ, திரைத்துறையோ எந்த ஆதரவும் அளிக்கவில்லை என நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement

திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து, பாஜக எம்பியாக உள்ளவர் கங்கனா ரனாவத். மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியல் வருகைக்கு பின் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் எமர்ஜென்சி.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய 21 மாத அவசரநிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘எமர்ஜென்சி’. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த 6ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தணிக்கை சர்ச்சையால் முடங்கிய இப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பத்மாவத்-க்கு அளித்த ஆதரவைப்போல எமர்ஜென்சிக்கு திரைத்துறை ஆதரவு அளிக்கவில்லை என கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இதுபோன்று கடந்த காலங்களிலும் நடந்துள்ளது. பத்மாவத், உத்தா பஞ்சாப் போன்ற படங்கள் சுமூகமாக வெளிவந்தன. ஒருவரின் மூக்கை, கழுத்தை அறுப்பதற்கான தொண்டைகள் இருந்தன. அவர்களை இந்த அரசு பாதுகாத்தது. ஆனால் என் படம் என வரும்போது, யாரும்... குறிப்பாக அரசியல் கட்சிகளும் திரைத்துறையும் எனக்கு ஆதரவளிக்கவில்லை. நான் நிச்சயமாக எனது சொந்தக்காலில் நிற்கிறேன் என்பதை இதன்மூலம் உணர்கிறேன். இந்த மாதிரியான உணர்வுகளையும், குறுகிய மனப்பான்மையுடைய சிந்தனையையும் பார்க்கும்போது, எந்த மாதிரியான நம்பிக்கையை மக்களிடமிருந்து பெறுவேன்?

எனது சொந்த தயாரிப்பில் உருவாகும் படம் வெளியாகவில்லை, என்பதை திரைத்துறை கொண்டாடுகிறது” என தெரிவித்தார்.

கடந்த 2016-ல் இயக்குநர் அபிஷேக் சௌபே இயக்கத்திலும், இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் இணைத் தயாரிப்பிலும் வெளியான திரைப்படம் ‘உத்தா பஞ்சாப்’. இப்படத்தில் ஆலியா பட், ஷாஹித் கபூர், கரீனா கபூர் மற்றும் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோர் நடித்திருந்தனர். பஞ்சாப் மாநிலத்தின் போதைப் பொருள்கள் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டது. மும்பை உயர்நீதிமன்றத்தின் அறிவுரைகளை அடுத்து இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதுபோல 2018 ஆம் ஆண்டிலும் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் ஷாஹித் கபூர் நடித்த பத்மாவத் திரைப்படத்திற்கும் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தன. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்படம் நிச்சயம் வெளியாகும் எனக் கூறிய தீபிகா படுகோனேவின் தலையை வெட்டினால், ரூ. 5 கோடி பரிசு வழங்கப்படும் எனவும் ராஜபுத்திரர்கள் அமைப்பினர் கூறியது நினைவுக்கூறத்தக்கது.

Tags :
AliaCensorship TroublesDeepika padukoneemergencyKangana RanautPadmaavatUdta Punjab
Advertisement
Next Article