Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Indore - #Jabalpur | மத்தியப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

10:53 AM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

உத்தர பிரதேசத்தில் இந்தூரில் இருந்து ஜபல்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. 

Advertisement

மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் "இந்தூர்-ஜபல்பூர்" விரைவு ரயிலின் 2 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டன. ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது இந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினா். எனினும் அந்த வழித்தடத்தில் ரயில்கள் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் "இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் (22191) இரண்டு பெட்டிகள் ஜபல்பூர் நிலையத்தின் 6 ஆவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.

மேலும் ரயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக பெரும் உயிரிழப்பு, சேதங்கள் போன்ற அசாம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது." என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
IndorejabalpurMadhya pradeshOvernight Express
Advertisement
Next Article