Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#MaheshBabu -க்கு ஜோடியாகும் இந்தோனேசிய நடிகை?

11:15 AM Sep 28, 2024 IST | Web Editor
Advertisement

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக இந்தோனேசிய நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'SSMB29' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் உருவாக உள்ளது. இந்த நிலையில், மகேஷ் பாபுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்தோனேசிய நடிகை செல்சியா எலிசபெத் இஸ்லானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இவருடன் மேலும் இரண்டு வெளிநாட்டு நடிகைகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Actor Mahesh BabuChelsea Elizabeth IslancinemaIndonesiaMahesh Babunews7 tamilRajamouliSSMB 29
Advertisement
Next Article