Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Indonesia | ஜாவா தீவில் திடீர் வெள்ளப்பெருக்கு - 10 பேர் பலி, இருவர் மாயம்!

09:07 PM Dec 09, 2024 IST | Web Editor
Advertisement

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மாயமாகினர். மழை வெள்ளத்தில் சிக்கி மாயாமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.

இந்த நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் 172 கிராமங்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article