Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”சுதேசி 4ஜி சேவையானது சுயசார்பை பிரதிபலிக்கிறது” - பிரதமர் மோடி..!

சுதேசி 4ஜி சேவையானது சுயசார்பை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
03:11 PM Sep 27, 2025 IST | Web Editor
சுதேசி 4ஜி சேவையானது சுயசார்பை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
Advertisement

பிரதமர் மோடி இன்று  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை தொடங்கி வைத்தார்.  ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி,  நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு புதிதாக அமைக்கப்பட்ட 97,500 கைப்பேசி கோபுரங்களை  காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து இது குறித்து பேசிய அவர்,

"இந்தத் தொடக்க விழா, இந்தியாவின் சார்புநிலையிலிருந்து நம்பிக்கையை நோக்கிய பயணமாகும். மேலும் இது,  வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, நிதி மறுமலர்ச்சி மற்றும் சுயசார்பு என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. 'சுதேசி' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுமையாக உருவாக்கப்பட்ட 4G சேவையானது,  டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படியாகும், இது டிஜிட்டல் பிளவைக் குறைத்து கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது" பேசினார்.

Tags :
BSNLlatestNewsPMModisudesi4g
Advertisement
Next Article