Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கிருஷ்ணகிரியில் நாட்டின் மிகப்பெரிய பேட்டரி ஆலை! ரூ.2000 கோடியில் அமைக்கிறது LOHUM நிறுவனம்!

11:47 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணகிரியில் பேட்டரி மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் LOHUM நிறுவனம் 2000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

Advertisement

மறுசுழற்சி, மறு பயன்பாடு மற்றும் குறைந்த கார்பன் சுத்திகரிப்பு மூலம் நிலையான பேட்டரி மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு LOHUM நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காத்தோட் ஆக்டிவ் மெட்டீரியலை உற்பத்தி செய்ய 6 ஆண்டுகளில் ரூ.2000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் இந்த நிறுவனம் 65 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. மேலும் 18 மாதங்களில் இந்த நிறுவனம் அதன் உற்பத்தியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 400 கோடி ரூபாய் முதல் இரண்டு ஆண்டுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக LOHUM நிறுவனத்தின் பெரு நிறுவன மேம்பாட்டு தலைவர் சச்சின் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பேட்டரி தயாரிக்க கூடிய ஓலா, எக்ஸ்சைட், டிவிஎஸ் மற்றும் அமரராஜா நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ‘விடியல்’ திட்டத்தின் மூலம் 450 கோடி முறை அரசுப் பேருந்துகளில் பெண்கள் பயணம்! தமிழ்நாடு அரசு தகவல்

இந்த NOHUM நிறுவனம் நொய்டாவில் 7 இடங்களிலும், ஐக்கிய அரபு நாடு, குஜராத் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 1,000 டன் திறன் கொண்ட கோபால்ட், நிக்கல் மற்றும் லித்தியம் ஆகியவற்றின் மறுசுழற்சி மற்றும் உற்பத்திக்காக ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் பேட்டரிகளை பெற உள்ளது.

Tags :
2000 crorebattery plantIndiainvestmentKrishnagiriPlanTamilNadu
Advertisement
Next Article