ஐசிசி டிசம்பர் மாத பட்டியல் - சிறந்த வீரராக சாதனை படைத்தார் #Bumrah!
ஐசிசியின் 2024 டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
06:10 PM Jan 14, 2025 IST
|
Web Editor
இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பந்துவீச்சாளரும் பும்ரா அளவுக்கு 19.56 எனும் சராசரியுடன் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் 200வது விக்கெட் டிராவிஸ் ஹெட் ஆக அமைந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறந்த வீரரருக்கான பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாத பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் பார்டர் கவாஸ்கர் போட்டியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வழிநடத்திய கேப்டனுமான பும்ரா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான வெளிப்படுத்தினார். மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை கடந்து புதிய சாதனையை படைத்தார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஆண்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடம் பிடித்தார்.
Next Article