Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் மீன் நுகர்வு!

10:44 AM Mar 26, 2024 IST | Web Editor
Advertisement

கடந்த 2005 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் இந்தியாவின் மீன் நுகர்வு 81 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

'வேர்ல்டுபிஷ்' நிறுவனம்,  சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்,  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பிற அரசு அமைப்புகள்,  இந்தியாவின் மீன் நுகர்வு குறித்து ஆய்வு ஒன்று நடத்தின.  அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்தியாவின் ஆண்டு தனிநபர் மீன் நுகர்வு,  கடந்த 2005ல்,  4.9 கிலோவாக இருந்தது.  இது 2021ல்,  81 சதவீதம் அதிகரித்து,  8.89 கிலோவாக உள்ளது.  2005-இல் 7.43 கிலோவாக இருந்த தனிநபர் வருடாந்திர மீன் நுகர்வு 2021-இல் 12.33 கிலோவாக அதிகரித்துள்ளது.  2005 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில்,  நாட்டின் மீன் உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்து 1.42 கோடி டன்னாக உள்ளது.

மொத்த மீன் உற்பத்தியில்,  உள்நாட்டு மீன் நுகர்வு 2005-2006 காலகட்டத்தில் 82.36 சதவீதமாகவும்,  2015-2016 காலகட்டத்தில் 86.2 சதவீதமாகவும் இருந்தது.  இது, 2019-2020 காலகட்டத்தில் 83.65 சதவீதமாக இருந்தது.   பட்டியலில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக அளவில் மீன் நுகர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் தனிநபர்
வருடாந்திர மீன் நுகர்வு 60 சதவீதமாக உள்ளது.

மீன் உண்பவர்களின் விகிதத்தைப் பொருத்தவரை,  99.35 சதவீதத்தினருடன் திரிபுரா முதலிடம் வகிக்கிறது.  வெறும் 20.55 பேர் மட்டுமே மீன் நுகர்வோரைக் கொண்டு
இந்தப் பட்டியலில் ஹரியானா கடைசி இடத்தில் உள்ளது.  கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்,  தமிழ்நாடு,  கேரளா மற்றும் கோவாவில் மீன் உண்ணும் மக்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

பஞ்சாப்,  ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மீன் நுகர்வோராக உள்ளனர்.  கடந்த 2005-2021 காலகட்டத்தில் இந்தியாவின் மீன் உண்ணும் மக்களின் விகிதம் 66 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீத புள்ளிகள் அதிகரித்து 72.1 சதவீதமாக
உள்ளது.  இந்த காலகட்டத்தில் முட்டை நுகர்வோர் 7.35 சதவீதமும்,  அதற்கு  அடுத்தபடியாக மீன் நுகர்வோர் 6.1 சதவீதமும் அதிகரித்துள்ளனர்.  கோழி அல்லது இறைச்சி உண்பவர்களின் விகிதம் 5.45 சதவீதம் அதிகரித்துள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
fishFish ConsumptionIndiaStudyWorldFish
Advertisement
Next Article