Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு?... இந்தியா மீது அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

08:42 AM Oct 17, 2024 IST | Web Editor
Advertisement

நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பற்கான உறுதியான ஆதாரம் அரசிடம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Advertisement

அவரது குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வேளையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது. 

இதனை தொடர்ந்து, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடந்த 14ஆம் தேதி புகார் அளித்தது. இந்த குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இந்தியாவில் உள்ள கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் 6 பேர் வெளியேற்றி, இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளிநாட்டு தலையீட்டு தொடர்பான விசாரணை ஆணையத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆஜரானார். அப்போது பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “நிஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்பதற்கான உளவுத்தகவலை மட்டுமே இந்திய அரசிடம் பகிர்ந்து கொண்டோம். இந்தியாவின் தொடர்பிற்கான ஆதாரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. நிஜார் கொலை மூலமாக இந்தியா, கனடாவின் இறையாண்மையை மீறிவிட்டது. மோடி அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் விவரங்கள், இந்தியாவிற்கு பகிரப்பட்டு, அந்த விவரங்கள் கிரிமினல் கும்பல்களுக்கு செல்கிறது. இது கனடா நாட்டவர்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுக்கும்” என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Tags :
CanadaJustin Trudeau
Advertisement
Next Article