Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2025 முதல் ரஷ்யா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

05:02 PM Dec 16, 2024 IST | Web Editor
Advertisement

2025ஆம் ஆண்டுமுதல் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷ்யா அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்வதற்கான நடவடிக்கைகளை, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளும் பரஸ்பரம் விசா கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான ஒப்பந்தம் குறித்து விவாதித்தன. இந்நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2023 ஆகஸ்ட் முதல் இ-விசா மூலம் இந்தியர்களை ரஷ்ய அரசு அனுமதித்து வந்தது. இந்த விசா 4 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இ-விசாக்களின் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 9,500 இந்தியர்களுக்கு இ-விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள் வணிக மற்றும் அலுவல் தொடர்பாக ரஷ்யாவிற்கு பயணம் செய்கிறார்கள். 2023 ஆம் ஆண்டில் 60,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாஸ்கோவிற்கு பயணம் செய்துள்ளனர். இது 2022 இல் இருந்து 26 சதவீதம் அதிகமாகும். 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 1,700 இ-விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனா மற்றும் ஈரான் நாட்டினரை விசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய ரஷ்யா அனுமதித்து வருகிறது. இந்த நடைமுறை வெற்றியடைந்ததை தொடர்ந்து, இந்தியர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யாவிற்குள் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் அந்நாட்டின் தூதரகத்தால் வழங்கப்பட்ட இந்தியர்கள் விசாவைப் பெற்றிருக்க வேண்டும். இந்த செயல்முறை மிக நீண்டதாகும்.

Tags :
IndianrussiaVisa Free Travel
Advertisement
Next Article