Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கொரோனாவுக்கு பிறகு இந்தியர்களுக்கு இவ்வளவு பாதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்!

04:29 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

கொரோனா பாதிப்புக்கு  பிறகு இந்தியர்களுக்கு அதிகளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது.  அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  இதன் பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்தன.  இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு பிறகே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் பல்வேறு பக்கவிளைவுகளை சந்தித்தனர்.  இருதய நோய்ப் பாதிப்புகள் மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்த் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியின் புதிய ஆய்வின்படி,  கொரோனாவிற்கு பிறகு ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்களை விட இந்தியர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

நுரையீரல் சார்ந்த பிரச்னை சிலருக்கு ஒரு வருடம் வரையும்,  மீதமுள்ளவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இதே நிலையில் வாழ வேண்டி இருக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சீனர்களை விட இந்தியர்களுக்குத் தான் அதிக நோய்த்தொற்றுகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் அதிக குறைபாடு இருப்பதாகத் தோன்றுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
chinaChristian Medical CollegeCoronacorona viruscovid 19India
Advertisement
Next Article