Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், ராம்சரண் பங்கேற்பு?

02:51 PM May 23, 2024 IST | Web Editor
Advertisement

‘இந்தியான் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.  இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா,  காஜல் அகர்வால்,  சித்தார்த்,  ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து படம் வரும் ஜூலை மாதம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.  நாளுக்கு நாள் ஒரு அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது.

படத்தின் முதல் பாடலான 'பாரா' பாடல் வெளியாகி கலவையான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குநர் ஷங்கர்,  ராம் சரணை வைத்து  ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
indian2music launchRajinikanthramcharanshankar
Advertisement
Next Article