மல்யுத்த வீரர் #BajrangPunia -க்கு 4 ஆண்டுகள் தடை!
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு தடை விதித்தது.
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. அவருக்கு வயது 30. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் கடந்த மார்ச் 10ம் தேதி தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது சிறுநீர் மாதிரியை வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மாறும்” – #IMD தகவல்
இதே குற்றத்திற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை முன்னதாக, பஜ்ரங் புனியாவை ஏப்ரல் 23 ஆம் தேதி இடைநீக்கம் செய்திருந்தது. இந்த இடைநீக்கத்தால், அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டு பயிற்சிகளைப் பெறவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.